முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அறிவித்திருந்தார். எனினும், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக்கொள்வதாவும் அவர் கூறியிருந்தார்.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகள் குழு இந்நாட்டு வெளியுறவுக் கொள்கையை அழிவுகரமான முறையில் செயல்படுத்தியதை சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர மிகுந்த அதிர்ச்சியுடன் கண்டித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திலித் ஜயவீர தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டு இதனை தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள், 22 மில்லியன் மக்களுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும். மேலும் நட்பு நாடுகள் கூட இலங்கை தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அதிர்ச்சியூட்டும் துரோகம் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகத்தின் முன் நாட்டின் முன்னுரிமைகள் குறைமதிப்படுத்தப்படுவது தற்போதைய அரசின் பலவீனமும் திறமையின்மையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை நிராகரித்தது அநுர அரசு!
T
The Leader Desk
அக்டோபர் 8, 2025 • 3:33 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அறிவித்திருந்தார்.
- இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திலித் ஜயவீர தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டு இதனை தெரிவித்தார்.
- எனினும், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடாது ஏற்றுக்கொள்வதாவும் அவர் கூறியிருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

