Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

T

The Leader Desk

அக்டோபர் 8, 2025 • 3:19 AM

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பரவாமல் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • இதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் 1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அபாயப் பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாயமுள்ள விலங்குகளாகவும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
  • விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பரவாமல் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் 1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய்க்கான அபாயப் பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாயமுள்ள விலங்குகளாகவும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் மேலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன், முன்னதாக நீக்கப்பட்டாலன்றி அல்லது அச்சட்டத்தின் 5(3) பிரிவின்படி செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டாலன்றி, நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து 03 மாதங்களுக்கு மேற்படாத காலத்திற்கு செல்லுபடியாகும் எனவும், நோயின் நிலையைப் பொறுத்து காலத்தை நீட்டிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பன்றிக் காய்ச்சல் நோயை அபாயப் பகுதிகளுக்குள் கட்டுப்படுத்தவும், பரவுவதைத் தடுக்கவும் பின்வரும் செயல்களையும் நடவடிக்கைகளையும் தடை செய்துள்ளார்.

விலங்கு நோய்கள் சட்டத்தின் 5 (4) பிரிவின் கீழ், அபாயத்திற்குள்ளான அனைத்து பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் உற்பத்திகள் அல்லது நோய்க்காரணியால் அசுத்தமான எதனையும், 1999 டிசம்பர் 03 திகதியிடப்பட்ட 1108/23 இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் VII படிவத்திற்கு இணங்க, பிரதேசப் பொறுப்பு கால்நடை வைத்திய அதிகாரியால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் இன்றி, அபாயப் பகுதிக்குள் அல்லது அதற்கு வெளியே கொண்டு செல்வது, அகற்றுவது, எடுத்துச் செல்வது அல்லது துரத்திச் செல்வது.

மேற்கண்ட பிரிவின்படி, போக்குவரத்திற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இல்லாத பன்றிகளை இறைச்சிக்காக வெட்டுதல்.

இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெறாமல் பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் உற்பத்திகள் மற்றும் நோய்க்காரணியால் அசுத்தமான எதனையும் விற்பனை செய்தல், விற்பனைக்கு உட்படுத்துதல், களஞ்சியப்படுத்தல் அல்லது விநியோகித்தல் மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து உற்பத்திகளைத் தயாரித்தல்.

குறித்த நோயினால் இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் எந்தவொரு விலங்கின் சடலத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அல்லது வேறு ஏதேனும் அபாயத்திற்குள்ளான பொருட்களையோ, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் உள்ள அறிவுறுத்தல்களின்படியன்றி, நீர்நிலைகள் உள்ள எந்த இடத்திலும் இடுதல், அல்லது வேறு விலங்குகளால் வேறு இடத்திற்கோ அல்லது பிரதேசத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய வகையில் எந்த இடத்திலும் இடுதல் அல்லது வைத்தல்.

இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடம்/களஞ்சியசாலை/இறைச்சி பதப்படுத்தும் நிலையம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்த இறைச்சிக் கூடத்திலோ, களஞ்சியசாலையிலோ/இறைச்சி பதப்படுத்தும் நிலையத்திலோ இறைச்சிக்காக வெட்டுதல்/களஞ்சியப்படுத்தல்/பதப்படுத்துதல்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...