நடைபெறவில்லை என்று பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் மூலம் உலர் உணவுப் பொருட்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்பட்டாலும், அந்த உணவுப் பொருட்கள் அந்தப் பகுதிகளிலுள்ள நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு இந்த நிலைமை காரணமாக உணவு பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசாங்க இயந்திரத்தின் உணவு விநியோகம் முறையாக இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பாக இலங்கை கிராம சேவகர் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கோடீகாரவிடம் வினவியபோது, இந்த அனைத்து விநியோகங்களும் பிரதேச செயலகங்கள் மூலமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
உலர் உணவுப் பொதிகள் தேவைப்படும் நபர்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவிடம் ‘சதி அக அருண’ (Sathi Aga Aruna) வினவியபோது, இந்த உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை விநியோகிக்கும் பணி மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக உரிய முறையில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, இடம்பெயர்ந்த ஒரு நபருக்கு ரூபா 2100/- பெறுமதியான உலர் உணவுப் பொதியும், ஒரு குடும்பத்திற்கு ரூபா 10,500/- இற்குள் அடங்கும் வகையில் உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், இந்த உணவு விநியோகத்தில் பிரதேச மக்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அப்பகுதியின் மாவட்டச் செயலாளரிடம் அறிவிக்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு 1904 எனும் அவசர இலக்கத்தின் ஊடாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


