Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டில் மீண்டும் கடும் மழை!

T

The Leader Desk

டிசம்பர் 7, 2025 • 3:24 AM

நாட்டில் மீண்டும் கடும் மழை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
  • நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
  • நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி.
எழுத்து அளவு:

பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் சேனாநாயக்க சமுத்திரம், அநுராதபுரம் மாவட்டத்தின் மகாவிலச்சிய, மகாகனதராவ, இராஜாங்கனை நீர்த்தேக்கங்கள், குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர மற்றும் பதுளை மாவட்டத்தின் சொரபொர ஆகிய நீர்த்தேக்கங்கள் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.

மேலும், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 6476 கன அடி நீரும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் வினாடிக்கு 1164 கன அடி நீரும் கலா ஓயாவிற்கு விடுவிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்தாலும், வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், அந்த நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பொறியியலாளர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையினால் நீர்ப்பாசனத் திட்டங்களின் கட்டுமானங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால், அந்த சேதங்களுக்கான தற்காலிக புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வலது கரை கால்வாய் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அது இன்றுடன் நிறைவடையும் என்றும், அதனூடாக அந்த நீர்த்தேக்கத்தின் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, எலஹர யோத கால்வாயின் புனரமைப்புப் பணிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் பாதுகாப்புப் படையினர் மற்றும் விவசாய அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சி மற்றும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைப் பொறுத்து இதன் கட்டுமானக் காலம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மற்றைய நீர்ப்பாசனக் கட்டுமானங்களின் புனரமைப்புப் பணிகளும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார கருத்துத் தெரிவிக்கையில், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான அளவீட்டு நிலையங்களை கருத்தில் கொள்ளும்போது, அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 30-35 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பத்தேகம மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் வெள்ள மட்டங்களைக் கருத்தில் கொள்ளும்போது, தந்திரிமலை மல்வத்து ஓயாவில் நீர்மட்டம் சாதாரண மட்டத்தை விட சற்று அதிகமாக இருந்ததாகவும், அதுவும் தற்போது குறைந்து வருவதாகவும் பொறியியலாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இது வெள்ள நிலைமை அல்ல என்றும், நீர்த்தேக்கங்களில் நீரை குறைக்க நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதால் ஏற்படும் நிலைமை என்றும் சுட்டிக்காட்டிய பொறியியலாளர், தற்போது பல பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

இதில் தெதுரு ஓயா, இராஜாங்கனை, நாச்சதூவ மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தின் ஏனைய நடுத்தர நீர்த்தேக்கங்களினது வான் கதவுகளைத் திறந்து நீர்மட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...