கடந்த 05ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று, ஜா-எல பிரதேசத்தில் மதுவரி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யும் உரிமம் பெற்ற நிலையமொன்று (மதுவரி உரிமம் இல. 04) திறக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மதுபானக் கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதுடன், அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து மதுவரித் திணைக்களம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இவ்வாறான தகவல்களை மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


