மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள வட மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு, தாபன விதிக்கோவையின் கீழ் வரும் ஒரு தவறைச் செய்துள்ளதால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) முன்னாள் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.


