Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

33%ஆகக் குறைந்துள்ள பிறப்பு வீதம்!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2025 • 3:19 AM

33%ஆகக் குறைந்துள்ள பிறப்பு வீதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குழந்தைப் பிறப்பு வீதம், 2024ஆம் ஆண்டில் அது 220,761ஆகக் குறைவடைந்துள்ளது என்றும் இது, 33 சதவீத வீழ்ச்சியாகக் கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
  • கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, ​​புதிய பிறப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • பிறப்பு வீதம் குறைவதற்கு பங்களிக்கும் காரணிகள் பற்றியும், வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவு நாட்டின் மக்கள்தொகைக்கு இரட்டை அடியைக் கொடுத்தது.
எழுத்து அளவு:

குழந்தைப் பிறப்பு வீதம், 2024ஆம் ஆண்டில் அது 220,761ஆகக் குறைவடைந்துள்ளது என்றும் இது, 33 சதவீத வீழ்ச்சியாகக் கணிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, ​​புதிய பிறப்புகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பல தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த பிறப்பு விகிதமாகும். இந்த நிலைமை குறித்து, அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாட்டின் வருடாந்த பிறப்புகளில் கூர்மையான சரிவைக் காட்டும் நீண்டகால விளைவுகள் பற்றி? அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிறப்பு வீதம் குறைவதற்கு பங்களிக்கும் காரணிகள் பற்றியும், வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் கருவுறுதல் விகிதம் பல வருடங்களாக கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது, சிறிய குடும்பங்களுக்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

நாட்டின் சமீபத்திய பொருளாதார நெருக்கடிகள், அந்த நீண்டகாலச் சரிவை அதிகப்படுத்தியுள்ளன. 2022ஆம் ஆண்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார சரிவு நாட்டின் மக்கள்தொகைக்கு இரட்டை அடியைக் கொடுத்தது. இதனால், பல தம்பதிகள் திருமணத்தையும் கர்ப்பமாவதையும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...