உலக விவகார கவுன்சிலில் (Indian Council of World Affairs-ICWA) முக்கிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
அங்கு, எதிர்க்கட்சித் தலைவர் உலகளாவிய இராஜதந்திரத்தில் இந்தியாவின் வரலாற்று மற்றும் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் பங்கைப் பாராட்டினார், அதனை "strategic autonomy and South–South cooperation.-ன் கலங்கரை விளக்கம்" என்று விவரித்தார்.
இதன்போது சஜித் பிரேமதாச இந்தியா மற்றும் இலங்கை இடையேயான ஆழமான நாகரிக மற்றும் ஜனநாயக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தியப் பெருங்கடலை அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான பிராந்தியமாகப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பையும் வலியுறுத்தினார்.
அத்துடன், புவிசார் பொருளாதாரத்தின் எழுச்சி மற்றும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகளின் குவிதல் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்த மாற்றத்தின் மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
நாகரிக மற்றும் தொழில்நுட்ப சக்தியாக இந்தியாவின் எழுச்சியையும், அதன் டிஜிட்டல் ஜனநாயகம், உற்பத்தி மற்றும் நம்பகமான உலகளாவிய கூட்டாண்மைகளை வளர்ப்பதில் அதன் வெற்றியையும் அவர் பாராட்டினார்.
குறிப்பாக மின்சார வாகனங்கள் மற்றும் விநியோகத் துறைகளில் இந்தியாவின் தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுடன் இணைய இலங்கையின் விருப்பத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நியாயமான மற்றும் சமநிலையான உலக ஒழுங்கிற்கு வடிவம்கொடுக்க, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர ஆசனத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் திறனில் நம்பிக்கை வைப்பதாகவும் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.


