Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவே தொலுவ விபத்துக்குக் காரணம்!

T

The Leader Desk

அக்டோபர் 6, 2025 • 4:55 PM

காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவே தொலுவ விபத்துக்குக் காரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
  • விபத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
  • விபத்துக்கு காரணமான காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை, தொலுவ பகுதியில் உள்ள விகாரைக்கு முன்பாகவே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த மூவரும் அந்த விகாரைக்கு வழிபாடுகளில் ஈடுபட வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் வீதியின் ஓரத்தில் பயணித்த போது, அங்கு வேகமாக பயணித்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியதோடு, அங்கு பயணித்த லொறி ஒன்றின் மீதும் மோதியுள்ளது.

இதனை அடுத்து லொறியும் அந்த பெண்கள் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது நான்கு பெண்கள் காயமடைந்த நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றொரு பெண் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 67 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கு காரணமான காரை 36 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தியுள்ளார்.

அவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பெண் தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வந்த நிலையில் அவரது கணவர் காரை செலுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.

பின்னர் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விகாரைக்கு அருகில் பயணித்த போது அந்த பெண் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்தியுள்ளார்

இதனால் கார் வேகமாக சென்று வீதியில் பயணித்த நான்கு பெண்கள் மீதும் லொறியிலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காரை செலுத்திய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவே தொலுவ விபத்துக்குக் காரணம்! | Tamil Leader | We Lead the Nation