ஆண்டுதோறும் சுமார் 1,300 மில்லியன் மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டுதோறும் ஒரு நபர் 130 கிலோகிராமுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக, ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பயிர் விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்தார்.
இலங்கையில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான விரயம் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


