Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மாணவர்கள் குறைந்த பாடசாலைகளை மூடத் தீர்மானம்!

T

The Leader Desk

அக்டோபர் 6, 2025 • 3:11 AM

மாணவர்கள் குறைந்த பாடசாலைகளை மூடத் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிபந்தனைகளின்படி, ஒரு பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாகாண மறுசீரமைப்புக் குழு அல்லது கல்வி அமைச்சின் மறுசீரமைப்புக் குழு பரிசீலிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு மாணவருக்கும் வசிக்கும் இடத்திற்கு அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் பாடசாலையை பெற்றுக்கொடுப்பதே பாடசாலைகளைச் சீரமைப்பதன் நோக்கமாகும்.
  • "அனைத்துப் பாடசாலைகளையும் சீரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

ஒரு வகுப்பில் மாணவர் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக இருத்தல் அல்லது பாடசாலையின் மொத்த மாணவர் எண்ணிக்கை ஐம்பதுக்கும் குறைவாகக் காணப்படுதல் மற்றும் பாடசாலை அமைந்துள்ள இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்குள், மூடப் பரிசீலிக்கப்படும் பாடசாலையின் வகைக்கு சமமான அல்லது அதைவிட உயர்ந்த தரத்திலான பாடசாலை அமைந்திருத்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும்.

எந்தவொரு மாணவரினதும் பாடசாலைக் கல்விக்குத் தடை ஏற்படாத வகையில், மூடப்படுவதற்குப் பிரேரிக்கப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை, அவர்கள் இலகுவாகச் சென்றடையக்கூடிய பொருத்தமான பாடசாலையில் இணைக்க வேண்டும் என, பாடசாலைக் கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளின்படி, ஒரு பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு மாகாண மறுசீரமைப்புக் குழு அல்லது கல்வி அமைச்சின் மறுசீரமைப்புக் குழு பரிசீலிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

"அனைத்துப் பாடசாலைகளையும் சீரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்" கீழ் இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவருக்கும் வசிக்கும் இடத்திற்கு அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய தரமான கல்வியை வழங்கும் பாடசாலையை பெற்றுக்கொடுப்பதே பாடசாலைகளைச் சீரமைப்பதன் நோக்கமாகும். மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...