இலங்கையின் தேசிய ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO), இந்த தினத்தை உலகளவில் கொண்டாடுவதற்காக ஒக்டோபர் 5ஆம் திகதியை பிரகடனப்படுத்தியது.
சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபராகக் கருதப்படும் ஆசிரியருக்காக, இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருள் "கற்பித்தலை ஒரு கூட்டுறவான தொழிலாக மீளமைத்தல்" என்பதாகும்.
இதேவேளை, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்முறை நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களில் கௌரவிக்கப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில், கல்வி முறையில் ஒரு புதிய மாற்றத்திற்கான பயணத்தை வடிவமைத்து, "ஆசிரியர்களின் குரலுக்கு செவிமடுத்து, ஆசிரியர்களைப் பாராட்டி, கல்விக்காக ஒரு புதிய சமூக உரையாடலை நோக்கி" அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


