திணைக்களம் தெரிவித்துள்ளது.
73 பிரதான நீர்த்தேக்கங்களில் 38 நீர்த்தேக்கங்களும், 36 நடுத்தர நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாக அத்திணைக்களம் மேலும் கூறியது.
மேலும், பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் மட்டம் அவற்றின் கொள்ளளவில் 79.6% (எழுபத்தொன்பது தசம் ஆறு சதவீதம்) அளவில் உள்ளது என்று நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் முகாமைத்துவம்) எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
அனுராதபுரம் கலா வாவியின் நீர் மட்டம் அதிகரித்ததன் காரணமாக, அதன் வான்கதவுகள் ஒவ்வொன்றும் 4 அடிக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நேற்று (04ஆம் திகதி) திறக்கப்பட்டன. நேற்று (04ஆம் திகதி) முற்பகலில் அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து நொடிக்கு 3,800 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டது.
இதேவேளை, இன்று (05ஆம் திகதி) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (04ஆம் திகதி) முற்பகல் 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ரம்பேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் 76 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.


