நிலச்சரிவுகளும் இன்னும் பதிவாகி வருகின்றன.
சமீப காலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் மத்திய மலைப்பகுதி தான் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இப்படியான பின்னணியில், கொத்மலை நயாபான மலையை அண்டிய சில பகுதிகளில் நிலத்தில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
சில வீடுகள் வெடித்து நிலத்தில் புதைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொத்மலை நயாபான கிராமத்திற்குச் செல்லும் வீதியின் பல இடங்களில் சுமார் ஒன்றரை அடி கீழே இறங்கி பிளவுபட்டுள்ளது.
இதன் காரணமாக, நயாபானை பிரதேசத்தில் இருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதேவேளை, கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் துனுகெவுல பிரதேசத்தின் சில பகுதிகளிலும் நிலத்தில் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கம்பளை - புப்புரஸ்ஸ பிரதான வீதியில் ரஜதலாவ பிரதேசத்தின் சில இடங்களில், கடந்த 28 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய நிலச்சரிவைத் தொடர்ந்து மீண்டும் நிலத்தில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலைமைகள் பதிவாகினால் உடனடியாக அந்த இடங்களிலிருந்து வெளியேறுவதே செய்ய வேண்டியது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.


