Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா!

T

The Leader Desk

செப்டம்பர் 5, 2025 • 4:19 AM

விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வு காணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
  • அத்தோடு இச்செயற்திட்டத்தின் கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.
எழுத்து அளவு:

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதுமான முறையில் தீர்வு காணும் நோக்கில் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (ஐ.ஓ.எம்.) அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் விசேட செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.

அத்தோடு இச்செயற்திட்டத்தின் கீழ் அரச கட்டமைப்புக்கள், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் சமூக அமைப்புக்கள், படையினர் வசமுள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள் உள்ளடங்கலாக இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சகல தரப்பினரும் உள்வாங்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

மேலும் இச்செயற்திட்டத்தின் ஊடாக வட, கிழக்கில் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல்,  படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், எல்லைகளை உரியவாறு மீள்நிர்ணயிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை உள்ளகக் கட்டமைப்புக்களுக்கு வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-வீரகேசரி

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...