அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டித்வா சூறாவளியால் நிலவிய மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைப் பாதையின் அனைத்து வீதிகளிலும் பயணித்த வாகனங்களுக்கு கட்டணம் அறவிட வேண்டாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கடந்த 27ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
அதன்படி, தென் அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கட்டுநாயக்க-கொழும்பு வீதி, மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தென் அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு ஆகிய அனைத்து வீதிகளிலும் பயணித்த வாகனங்களுக்கு நிலவிய மோசமான வானிலை தணியும் வரை இலவச பயண வசதி வழங்கப்பட்டிருந்ததுடன், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அந்தச் சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.


