Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

நிவாரண உதவிகளை அள்ளிக் கொடுத்துவரும் சர்வதேச நாடுகள்!

T

The Leader Desk

டிசம்பர் 4, 2025 • 5:36 AM

நிவாரண உதவிகளை அள்ளிக் கொடுத்துவரும் சர்வதேச நாடுகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • ஏற்கனவே இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை அவசர நிவாரண உதவியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்த நிலையில் அதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்திருந்தது.
  • இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர நிவாரண உதவியானது 3.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
  • அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை அவசர நிவாரண உதவியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்த நிலையில் அதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்திருந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர நிவாரண உதவியானது 3.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இலங்கை, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுடனும் அவுஸ்திரேலியா தொடர்பில் உள்ளதாகவும், அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கோரிக்கைகளுக்கு அமைய அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஊடாக உதவிகள் வழங்கப்படும் எனவும் அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இந்த ஆதரவானது அவசர நிவாரணப் பொருட்கள், தங்குமிடம், உணவு, நீர் வசதிகளை வழங்குகிறது.

மேலும் இது இடம்பெயர்ந்த மக்களின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஆதரவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

சீனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை கையளித்துள்ளார்.

அதற்கமைய, சீனா அரசாங்கத்தினால் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கான நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சீனா அரசாங்கத்தினால் 10 மில்லியன் யுவான் பெறுமதியான நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சீன செஞ்சிலுவை சங்கத்தினால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரணமும், இலங்கையில் உள்ள சீன வர்த்தக சமூகத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதியும் இலங்கை வௌிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று இன்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.

அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான 'C-130' விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய மேலும் 02 விமானங்கள் நேற்று (03) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து விமானங்களான இரண்டு C-17 ரக விமானங்கள் அபுதாபியில் இருந்து நாட்டை வந்தடைந்தன.

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்குகின்றன.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இந்நாட்டிலுள்ள ஐக்கிய அரபு இராச்சியத் தூதரக அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...