எடுக்கப்பட்டுள்ளது. மாவனல்ல பொலிஸார் இதனைக் குறிப்பிட்டனர்.
திறக்கப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கடுங்கண்ணாவ ஊடான வாகனப் போக்குவரத்தை இன்று (04) காலை மீண்டும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு கடை மற்றும் ஒரு வீட்டின் மீது மண் மேடும் கற்களும் சரிந்து விழுந்த கீழ் கடுங்கண்ணாவை, கனேத்தென்ன பிரதேசத்திலேயே இவ்வாறு போக்குவரத்து மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அந்த இடத்தை சோதனையிடுவதால், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் மாத்திரம் அந்தப் பகுதியூடாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடுங்கண்ணாவை பொலிஸாரிடம் வினவியபோது, கடுங்கண்ணாவை நகரிலிருந்தும், கனேத்தென்ன நகரிலிருந்தும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டு குறித்த வீதிப் பகுதி மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


