எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிடுகின்றது.
கடந்த 3ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பயணச்சீட்டு வழங்காத குற்றத்திற்காக சிக்கும் தனியார் பஸ் நடத்துநர்களுக்கு முதல் கட்டமாக மூன்று நாட்கள் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் எனவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜயசிங்க தெரிவித்தார்.
இது தவிர, குறித்த நடத்துநர்களிடமிருந்து எழுநூற்று ஐம்பது ரூபாய் (750) கட்டணம் அறவிடப்பட்டு, அவர்கள் ஒரு விசேட பாடநெறிக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தலைவர் கூறினார்.
இதேவேளை, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பயணச்சீட்டு வழங்காத பஸ்களை இலக்குவைத்து சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், முதல் நாளில் பயணச்சீட்டு வழங்காத 22 பஸ்களுக்கு எதிராக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சோதனையின் இரண்டாவது நாளில், இவ்வாறான 11 பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாணத்தில் இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் தலைவர் கூறினார்.


