நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 146 நிலத்துண்டுகளை டெண்டர் விடுவதன் மூலம் நகர சபைக்கு 36 இலட்சம் ரூபாய்க்கு (ரூ. 36,68,000) மேல் வருமானம் ஈட்ட முடிந்துள்ளது.
குறித்த டெண்டர் கோரல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஹட்டன் நகரின் நடைபாதைகளில் வியாபாரம் செய்வதற்கு அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக, ஹட்டன் ஸ்டார் சதுக்கம் (Star Square) மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள மைதானம் வியாபார நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்துண்டுகளுக்காக அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் துறையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டு, டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன.
இவ்வாறு கோரப்பட்ட டெண்டர்கள் நகர சபை செயலாளர் ஷியாமளீ ரூபசிங்க மற்றும் நிதிக் குழு உறுப்பினர்களின் மேற்பார்வையின் கீழ் திறக்கப்பட்டதன் பின்னர் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.
இந்த டெண்டர்கள் மூலம் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளுக்காக நிலத்தைப் பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து, அந்த டெண்டர் தொகைக்கு மேலதிகமாக குப்பைகளுக்கான வரி மற்றும் வியாபார வரி அறவிடப்பட்டுள்ளதுடன், நகர சபையால் வழங்கப்படும் விதிமுறைகளின் கீழ் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


