இந்த ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது.
குறித்த காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பான 5,461 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றுள் 4,501 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்துடன் தொடர்புடையவை எனவும், 960 முறைப்பாடுகள் சட்டத்துடன் தொடர்பில்லாதவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில், சிறுவர்கள் மீதான கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 141 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 330 முறைப்பாடுகளும், பாலியல் வன்புணர்வு தொடர்பாக 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளில், சிறுவர்களைக் கொடுமைப்படுத்துதல் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் பதிவாகியுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 1,126 ஆகும்.
சிறுவர்களைப் பிச்சையெடுப்பதில் ஈடுபடுத்துவது தொடர்பாக 125 முறைப்பாடுகளும், சிறுவர் தொழிலாளர் தொடர்பாக 82 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இந்த ஆண்டின் கடந்த 7 மாதங்களில், சிறுவர்களுக்கு எதிரான இணையவழித் துன்புறுத்தல்கள் (சைபர்) தொடர்பாக 81 முறைப்பாடுகளும், தற்கொலை செய்துகொள்ளுதல் தொடர்பாக 10 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 63 முறைப்பாடுகளும், மூன்று சிறுவர் ங்கள் மற்றும் ஒரு கருக்கலைப்பு தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


