Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

செம்மணி குறித்து 16 பரிந்துரைகளை முன்வைத்த மனித உரிமைகளட ஆணைக்குழு!

T

The Leader Desk

செப்டம்பர் 4, 2025 • 1:21 AM

செம்மணி குறித்து 16 பரிந்துரைகளை முன்வைத்த மனித உரிமைகளட ஆணைக்குழு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
  • நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்குப் புதைகுழி அகழ்வு தொடர்பில் 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • அறிக்கையிடும் காலப் பகுதியில், 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • முதற்கட்ட கண்டுபிடிப்புகள் 90 வீதத்துக்கும் மேற்பட்ட உடலங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில், புதைகுழி அகழ்வின் முன்னேற்றம் மற்றும் குறிப்பிடத்தக்க சவால்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்குப் புதைகுழி அகழ்வு தொடர்பில் 16 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் பணியில், புதைகுழிதளம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவத் துறை மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், நீதிவான்கள், தடயவியல் நிபுணர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

அறிக்கையிடும் காலப் பகுதியில், 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கண்டுபிடிப்புகள் 90 வீதத்துக்கும் மேற்பட்ட உடலங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டுள்ளன. சாத்தியமான - நீதிக்குப் புறம்பான கொலைகளைக் குறிக்கும் வகையில் புதைக்கப்பட்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதைகுழி அகழும் விடயத்தில் நிபுணத்துவம், நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் உள்ள இடைவெளிகளை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கமான பொலிஸாரின் தொடர்ச்சியான ஈடுபாடு முடிவைப் பாதிக்கக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கு ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், மரபணுப் பகுப்பாய்வு மற்றும் காலத்தைக் கணிக்கும் கார்பன் டேட்டிங் ஆகியவற்றுக்கான வெளிநாட்டு நிபுணத்துவத்தைப் பெறுதல் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு தேசிய மரபணு வங்கியை உருவாக்குதல் ஆகியவற்றை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

 சாட்சிகள் மற்றும் ஊடகங்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸாரையும், விசாரணையில் தலையிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை இராணுவத்தை யும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

சில நிறுவன நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்காக முறையான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

போதுமான தடயவியல், மானுடவியல் மற்றும் தொல்பொருள் நிபுணர்கள் இல்லாதமை, மேம்பட்ட கார்பன் டேட்டிங் முறைகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் மற்றும் மரபணு பகுப்பாய்வில் உள்ள சவால்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய இடைவெளிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

நிதியுதவியில் தாமதங்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் ஏற்படும் மிரட்டல்கள், பொறுப்புக்கூறல் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

செம்மணி குறித்து 16 பரிந்துரைகளை முன்வைத்த மனித உரிமைகளட ஆணைக்குழு! | Tamil Leader | We Lead the Nation