கொள்முதல் வழிகாட்டுதல்கள் - 2024இன் விதிகளின்படி, இரட்டை உறை முறையின் கீழ் தொழில்நுட்ப மற்றும் நிதிசார் ஏலங்கள் கோரப்பட்டன.
அதன்படி, 5 ஏலதாரர்கள் ஏலங்களைச் சமர்ப்பித்திருந்தனர். அதில் 2 ஏலங்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்குப் பிறகு நிதிசார் ஏல மதிப்பீட்டிற்குத் தகுதி பெற்றன.
இதற்கமைய, சம்பந்தப்பட்ட ஏலங்கள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரக் கொள்முதல் குழு மற்றும் கொள்முதல் முறையீட்டுச் சபை ஆகியவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், 2026 ஜனவரி மாதம் முதல் 12 மாத காலத்திற்கு 380,000 மெட்ரிக் டன் (+ 20%) திரவ பெட்ரோலிய வாயுவை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கான கொள்முதலை, Geo Gas Trading S.A. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


