பல இடங்களில் நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
அதனால், எதிர்வரும் நாட்களில் மீண்டும் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான ஆபத்து ஏற்படக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organisation - NBRO) மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, மலைப்பகுதிகளில் உள்ள ஆபத்தான வலயங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. சமீபத்திய வானிலை ஆய்வு அறிக்கைகளின் தரவுகளின் அடிப்படையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் நாட்களில் நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், டிசம்பர் 4ஆம் திகதி முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


