அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெல்மதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, மொரகஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒரு பிள்ளையின் தாயான மதாரா மதுபாஷினி என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மருத்துவர், கடந்த 19ஆம் திகதி, பணியை முடித்துவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் பெல்மதுளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பேருந்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
ஒரு முச்சக்கர வண்டி திடீரென வீதியைக் கடக்க முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்ததால், பெண் மருத்துவர் வாசலிலிருந்து தூக்கி வீசப்பட்டு வீதியில் விழுந்ததாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி உயிரிழந்த குறித்த பெண் மருத்துவரின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.


