Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2025 • 2:16 PM

பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
  • இந்த ஏற்பாடுகள் தொடர்பில், இன்று (03) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இத்தகவல்களை வெளியிட்டார்.
  • அனைவரும் காலை 7 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இதேவேளை, சுதந்திரதின கொண்டாட்டங்களைக் காண வரும் பொதுமக்கள் பௌத்தாலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு, தங்கள் இருக்கைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
எழுத்து அளவு:

அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் தொடர்பில், இன்று (03) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இத்தகவல்களை வெளியிட்டார்.

நிகழ்வுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனைவரும் காலை 7 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சுதந்திரதின கொண்டாட்டங்களைக் காண வரும் பொதுமக்கள் பௌத்தாலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு, தங்கள் இருக்கைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள முப்படைகளின் எண்ணிக்கை 40 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...