Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!

T

The Leader Desk

பிப்ரவரி 3, 2025 • 10:58 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக அரசாங்கம் பொய்யான தகவலை வழங்குகின்றது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
  • இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
  • அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம்.
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:

வழங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அசாத் மௌலானா தொடர்பாகவும் அரசாங்கத்தின் பொய்யான பிரசாரம் தொடர்பாகவும் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது  இலங்கை புலனாய்வுத்துறை என்று செனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இமாம் குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்த கடந்த ஒக்டோபர் மாதம் நாம் பகிரங்கப்படுத்தியிருந்தோம். அதில் பலவிடயங்களை தெரியப்படுத்தியிருந்தோம்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற் குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலானா செனல் 4 வுக்கு தெரிவித்திருந்தார். அவரை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...