அனர்த்த நிலைமை குறைந்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களில் சுமார் 2,500 பஸ்கள் நீண்ட தூர பயணங்களுக்காக திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பிரதிப் பொது முகாமையாளர் (இயக்கம்) பி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.
அத்துடன், நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளுக்காக விசேட பஸ் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பிலிருந்து பயணித்த 37 ரயில்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்ப முடியாமல் போயுள்ளன.
அவற்றில் 18 அலுவலக நேர ரயில்கள் அடங்குவதாக ரயில்வேயின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரவீர தெரிவித்தார்.


