Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவோருக்கு பொலிஸ் அறிவித்தல்!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2025 • 5:40 AM

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவோருக்கு பொலிஸ் அறிவித்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிவாரணக் குழுக்கள் வருகை தருவது அந்தப் பணிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இவ்வாறு வருகை தருபவர்களுக்கும் நிலைமை ஆபத்தானது என்றும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிவாரணக் குழுக்கள் குறித்த பிரதேசங்களில் உள்ள பிரிவுகளுக்குப் பொறுப்பான நிலையப் பொறுப்பதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
  • பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்: 071- 8595884 071- 8595883 071- 8595882 071- 8595881 071- 8595880.
எழுத்து அளவு:

நிவாரணக் குழுக்கள் வருகை தருவது அந்தப் பணிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிவாரணக் குழுக்கள் ஆற்றிவரும் சேவைக்கு தமது கௌரவமான நன்றியைத் தெரிவிப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வூட்லர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சில மாவட்டங்களில் வீதி திருத்தும் பணிகள் இடம்பெறும் பகுதிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வருகை தருவது அப்பணிகளுக்கு இடையூறாக உள்ளதுடன், சில மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் வந்து அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களை அவதானித்து, அவற்றைப் வீடியோ எடுப்பது சம்பந்தப்பட்ட இடங்களில் கடமையில் உள்ளவர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தருபவர்களுக்கும் நிலைமை ஆபத்தானது என்றும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிவாரணக் குழுக்கள் குறித்த பிரதேசங்களில் உள்ள பிரிவுகளுக்குப் பொறுப்பான நிலையப் பொறுப்பதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

மேலும், அனர்த்த நடவடிக்கைப் பிரிவுக்கு அழைத்து நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.

பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவின் தொலைபேசி இலக்கங்கள்:

071- 8595884

071- 8595883

071- 8595882

071- 8595881

071- 8595880

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...