விமானம் ஒன்று இன்று (02) அதிகாலையில் இலங்கையை வந்தடைந்தது.
இந்த நன்கொடையில் உணவுப் பொருட்கள், கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் கையிருப்பு அடங்கும்.
கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷித் அலி அல் மஸ்ரூயி (Rashed Ali Al Mazrouei) அவர்களால், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் (மத்திய கிழக்கு) செவ்வந்தி த சில்வா, மேஜர் ஜெனரல் சுமேத விஜேகோன், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கெப்டன் ரம்புக்கொல்ல ஆகியோரிடம் இந்த உதவிப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.


