காணாமல் போன குடும்பத்தைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். நுவரெலியா சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர், நேற்று (01) இந்த நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
கடந்த 27ஆம் திகதி நண்பகல் குறித்த பிரதேசத்தில் பெய்த பலத்த மழையுடன் இந்த வீடு மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதுடன், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.


