Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறை!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2025 • 5:00 AM

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்குவதற்காக வெளிநாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கையர்கள் பல்வேறு வினவல்களை விடுத்துள்ளனர்.
  • அத்துடன், இவ்வாறு நன்கொடையாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் வகைகள் பற்றிய விரிவான தகவல்களை www.donate.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
  • www.customs.gov.lk இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ அல்லது +94 70 475 2823 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது relief25@customs.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ இதுபற்றி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எழுத்து அளவு:

வழங்குவதற்காக வெளிநாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கையர்கள் பல்வேறு வினவல்களை விடுத்துள்ளனர்.

அதன்படி, அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் பொருள் உதவிகளை அனைத்து சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி துரிதமாக விடுவித்து விநியோகிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இலகுவான பொறிமுறையொன்றை அறிவித்துள்ளது.

நன்கொடைகள் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு www.customs.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம். அத்துடன், இவ்வாறு நன்கொடையாக வழங்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பொருட்களின் வகைகள் பற்றிய விரிவான தகவல்களை www.donate.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

வெளிநாட்டு நன்கொடையாளர்கள் எந்தவொரு போக்குவரத்து முறையையும் பின்பற்றி இந்த பொருள் உதவிகளை இலங்கைக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும், அந்தப் பொருட்கள் அனைத்து சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி விடுவிக்கப்படுவதற்கு வசதி பெறுவதற்கு, அனைத்துப் பொருட்களும் பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்:

செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), வித்யா வீதி, கொழும்பு 07

மேலும், இந்த பொருள் நன்கொடை இந்நாட்டிலுள்ள வேறு ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் பெயருக்கு அனுப்பப்படும் பட்சத்தில், வரி விலக்கு அவசியமாயின், அந்த நன்கொடையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் சம்மதிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், சாதாரண சுங்க அனுமதிப்பத்திர செயல்முறையினூடாகவே அது மேற்கொள்ளப்பட வேண்டும்.

www.customs.gov.lk இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ அல்லது +94 70 475 2823 என்ற அவசர இலக்கத்தின் மூலமாகவோ அல்லது relief25@customs.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ இதுபற்றி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கீழ் விடுவிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய, பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு முறையாகவும் துரிதமாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதையும், நன்கொடைகளை வழங்குவதற்கு நன்கொடையாளர்களை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றுக்கொள்ள இலகுவான பொறிமுறை! | Tamil Leader | We Lead the Nation