Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

256 பிரதான வீதிகள்; 15 பாலங்கள் சேதம்!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2025 • 4:53 AM

256 பிரதான வீதிகள்; 15 பாலங்கள் சேதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதிகார சபைக்கு சொந்தமான A மற்றும் B தர பிரதான வீதிகள் 256க்கும் அதிகமானவை சேதமடைந்துள்ளதாகவும், அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.
  • அத்துடன், சுமார் 15 பிரதான பாலங்கள் உடைந்தும் ஆபத்தான நிலையிலும் உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
  • உடைந்துபோன பாலங்களுக்கு நிரந்தரப் பாலங்கள் அமைக்கப்படும் வரை, அதற்குப் பதிலாக தற்காலிக தடுப்பணைப் பாலங்கள் (Dam Bridges) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அதிகார சபைக்கு சொந்தமான A மற்றும் B தர பிரதான வீதிகள் 256க்கும் அதிகமானவை சேதமடைந்துள்ளதாகவும், அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.

அத்துடன், சுமார் 15 பிரதான பாலங்கள் உடைந்தும் ஆபத்தான நிலையிலும் உள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பிரதான நகரங்களை இணைக்கும் வீதி அமைப்பு செயலிழந்துள்ளதால் தடைப்பட்டுள்ள போக்குவரத்து நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவருவதை முதன்மைக் கடமையாகக் கருதி, மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் அனைத்து தரவுகளையும் பெற்று, வீதி புனரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இதுவரை சேதமடைந்த வீதிகளில் 123 வீதிகளை உடனடியாக புனரமைத்து வாகனப் போக்குவரத்துக்கு திறந்துள்ளதாகவும், நகரங்களுக்கு இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள ஏனைய வீதிகளையும் சுமார் 10 நாட்களுக்குள் வாகனப் போக்குவரத்துக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

வெள்ளத்தில் மூழ்கிய வீதிகளில் நீர் வடிந்ததன் பின்னர் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும், மண்சரிவு, மண்மேடுகள் சரிவு மற்றும் பாரிய கற்கள் விழுந்த வீதிகள் உடனடியாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவே நேற்று (டிசம்பர் 1) வரை 123 வீதிகளில் வாகனப் போக்குவரத்தை மேற்கொள்ள முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

உடைந்துபோன பாலங்களுக்கு நிரந்தரப் பாலங்கள் அமைக்கப்படும் வரை, அதற்குப் பதிலாக தற்காலிக தடுப்பணைப் பாலங்கள் (Dam Bridges) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...