Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

லுணுவில ஹெலி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பதவி உயர்வு!

T

The Leader Desk

டிசம்பர் 2, 2025 • 4:48 AM

லுணுவில ஹெலி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பதவி உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சியம்பலாபிட்டியவுக்கு, குரூப் கெப்டன் (Group Captain) தரநிலை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • நேற்று முன்தினம் (30) மாலை, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் - 212 (Bell - 212) ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ, லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்த குழுவினருக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்த போது, ​​அவசரமாக தரையிறக்கப்பட்டது.
  • விபத்து இடம்பெற்றபோது, ​​விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை வீரர்கள் ஹெலிகொப்டரில் இருந்தனர்.
  • இவ்வாறு உயிரிழந்தவர், 3,000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணிநேரங்களை நிறைவு செய்த 41 வயதுடைய அனுபவம் வாய்ந்த விமானி என்று இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

சியம்பலாபிட்டியவுக்கு, குரூப் கெப்டன் (Group Captain) தரநிலை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவரது முன்மாதிரியான சேவை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பு மிக உயர்ந்த மரியாதையுடன் கருதப்படும் என்று இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, வென்னப்புவ - லுணுவில பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குறித்து விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் (30) மாலை, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் - 212 (Bell - 212) ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ, லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்த குழுவினருக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்த போது, ​​அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்போது ஹெலிகொப்டர், அருகில் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்றபோது, ​​விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை வீரர்கள் ஹெலிகொப்டரில் இருந்தனர். பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எவ்வாறாயினும், இதில் பிரதான விமானி விங் கொமாண்டர் நிர்மாள் சியம்பலாபிட்டிய (Wing Commander Nirmal Siyambalapitiya) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், 3,000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணிநேரங்களை நிறைவு செய்த 41 வயதுடைய அனுபவம் வாய்ந்த விமானி என்று இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏனைய நான்கு விமானப்படை அதிகாரிகள் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான பதிவுகள் வெளியாகியுள்ளன.

அவற்றில் ஒரு பதிவு இதோ:

சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மாள், DITWA சூறாவளியால் தனது வாழ்க்கையை அகாலமாக அர்ப்பணித்த, விலைமதிப்பற்ற ஒரு இலங்கை விமானியாக, நேற்றைய தினத்தில் இலங்கை மக்களின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு இணைந்துகொண்டார்...

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லுணுவில ஹெலி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பதவி உயர்வு! | Tamil Leader | We Lead the Nation