இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களின் போது இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கை, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் இவ்வாறு இந்திய ரூபாயைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையையும் இந்திய ரூபாயில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய வர்த்தகத்தில் அமெரிக்க டொலரில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தனது முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கு உத்தியோகபூர்வ மாற்று விகிதத்தை அறிமுகப்படுத்தவும் இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


