Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி 9ஆம் திகதி தெரியவரும்!

T

The Leader Desk

அக்டோபர் 2, 2025 • 4:23 AM

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி 9ஆம் திகதி தெரியவரும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை.
எழுத்து அளவு:

அறிவிப்பதற்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை அரசாங்கம் அவகாசம் வழங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அங்கு மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் இனம் மதம் அடிப்படையில் எந்தவொரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்றே வடக்கா?, கிழக்கா? தெற்கா? என பார்த்து ஒரு பகுதியினருக்காக மாத்திரம் வேலைத்திட்டங்கள் பகிரப்படவில்லை. நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்லும் போது அனைத்து மக்களின் வளர்ச்சியும் முக்கியமானதாகும். நாம் இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டும். 

இதுவரை காலமும் உங்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. வாழ்க்கைத் தரம் மாறுமானால் அவர்களுக்கு அதிகாரத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க முடியாது. எமது நாட்டிற்கு டொலரை கொண்டு வரும் முக்கிய பொருளாதாரமாக பெருந்தோட்டத்துறையும் இருக்கின்றது. எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி எனும் பார்க்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். 

அரசாங்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்தி பல மட்டங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இறுதியாக கடந்த 9ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. அதில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தது. தற்போது நாளாந்த சம்பளமாக 1350 ரூபாயும் மேலதிகமாக பறிக்கப்படும் தேயிலை கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதமும் வழங்கப்படுகின்றது. 

எனவே எதிர்வரும் 9ஆம் திகதி வரையான ஒரு மாத காலம் வழங்கி முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டை கோரியுள்ளோம். இந்த கலந்துரையாடல் மூலம் இணக்கப்பாடு ஒன்றை எட்டவே அரசாங்கம் என்ற வகையில் நாம் எதிர்பார்க்கின்றோம். தொழிநுட்பம் மற்றும் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் கடந்த காலத்தில் தேயிலை தொழிற்துறை பாரிய இலாபம் ஈட்டியுள்ளது. நட்டம் ஏற்பட்டிருக்குமானால் அதற்கு நிர்வாகமே காரணம். 

உரிய வகையில் தேயிலையை பராமரித்திருக்க அவர்களே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் ஏனைய பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களையும் ஒவ்வொன்றாக தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி 9ஆம் திகதி தெரியவரும்! | Tamil Leader | We Lead the Nation