Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

'எம்மை நாமே ஆளக்கூடிய வாக்கெடுப்பை நடத்துங்கள்': ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மனு!

T

The Leader Desk

அக்டோபர் 2, 2025 • 3:58 AM

'எம்மை நாமே ஆளக்கூடிய வாக்கெடுப்பை நடத்துங்கள்': ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மனு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கிறோம்" என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுப்பிவைத்துள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • செம்மணியில் கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் நிறைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் 350க்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச நீதிகோரி போராடி நீதி கிடைக்காமலே மன உளைச்சலில் இறந்துள்ளனர்.
  • இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். அத்துடன், அனைத்து வகையான உளநாட்டு பொறிமுறை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை ஆகியவற்றை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். சர்வதேச நீதிப் பொறிமுறையில் மட்டுமே நாம் நம்பிக்கை வைக்கிறோம்.
எழுத்து அளவு:

பொதுவாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கிறோம்" என்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுப்பிவைத்துள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செம்மணியில் கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் நிறைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியும் இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை முற்றாக நிராகரித்தும் செம்மணி, வடக்கு - கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனித புதைகுழிகள் விவகாரத்துக்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன விசா ரணை ஆணையத்தை நியமித்திட கோரியும் குறித்த சுழற்சி முறையி லான உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம் - செம்மணியிலும் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (நேற்று) இந்தப் போராட்டத்தின் ஊடாக சர்வதேசத்தின் கவனத்துக்கு எங்கள் கோரிக்கையை வெளியிடுகிறோம்.

 சர்வதேச சிறுவர், முதியோர் தினம் இன்றாகும். தாயகத்தில் அதிகளவான சிறுவர்கள், குழந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் 350க்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச நீதிகோரி போராடி நீதி கிடைக்காமலே மன உளைச்சலில் இறந்துள்ளனர்.

 ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல் கர் டர்க் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளில் இருந்து மீள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது. இதனை தவறவிடக்கூடாது என வலியுறுத்திக் கூறியுள்ளார். இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். 

அத்துடன், அனைத்து வகையான உளநாட்டு பொறிமுறை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை ஆகியவற்றை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.  சர்வதேச நீதிப் பொறிமுறையில் மட்டுமே நாம் நம்பிக்கை வைக்கிறோம். சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, சர்வதேச பொறிமுறையை நாம் கோருகிறோம். தற்போதைய பேரவை கருத்திட்டம் தரமுயர்தப்பட வேண்டும். இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இனஅழிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள பன்னாட்டு நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும். 2002 ஜூலை 01ஆம் நாளுக்கும் காலத்தால் முற்பட்ட குற்றங்களை விசாரிக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு முற்பட்ட காலங்களுக்கு விசாரணை மேற்கொள்ள முடியாதவிடத்து இலங்கை தொடர்பான சிறப்பு சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி இனவழிப்பு  உள்ளிட்ட குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கான சட்ட நடவடிக்கை அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழிகள் பற்றிய கண்துடைப்பு விசாரணைகளை இலங்கை அரசு நிறுத்தி, சர்வதேசத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் எனக் கோருகிறோம். 

251001strike89.jpg

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? 

அவர்களுக்கான சர்வதேச நீதி வேண்டி 3 ஆயிரத்து 146 நாட்கள் தொடர்ச்சியாக வீதிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அவர்களுக்கான சர்வதேச நீதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறோம். 

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடராது நிறுத்த பின்வருவன தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும், ஊடகவியலாளர்கள் தமது சுயாதீனமான ஊடகப்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், சிங்கள குடியேற்றம் - பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும், தமிழர் தாயகப் பரப்பில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

 மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், நீதி வேண்டி போராடுபவர்கள் மீது புலனாய்வு பிரிவின்  அச்சுறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும், எமது தேசத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உடன் நிறுத்தப்பட்ட வேண்டும், எமது வளங்கள் சுரண்டப்படுவதை உடன் நிறுத்தப்பட வேண்டும், பயங்கரவாத தடுப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

 இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத் தமிழருக்கான தனித்துவமான இறையாண்மைக்குரிய தாயகம், தேசியம் - சுயநிர்ணய உரிமை - அங்கீகரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்தின் மத்தியஸ்தத்துடன்  நிறைந்த அரசியல் தீர்வு குறிப்பிட்ட கால நிர்ணயத்துக்குள் காணப்பட வேண்டும். இயலாதவிடத்து விரைவாக அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொதுவாக்கெடுப்பை நடைமுறைப் படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கிறோம் - என்றுள்ளது. 

251001strike5.jpg

 

251001strike2.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'எம்மை நாமே ஆளக்கூடிய வாக்கெடுப்பை நடத்துங்கள்': ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மனு! | Tamil Leader | We Lead the Nation