Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

விடைபெற்றார் மாவை: மயானத்தில் தடை விதிக்கப்பட்ட சுமந்திரன், சாணக்கியன் உட்பட 19 பேர்

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2025 • 1:34 PM

விடைபெற்றார் மாவை: மயானத்தில் தடை விதிக்கப்பட்ட சுமந்திரன், சாணக்கியன் உட்பட 19 பேர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் மீதான மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.
  • சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.
  • மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் இன்று (02) பகல் இரண்டு மணிக்கு அக்கினியில் சங்கமமானது.
  • குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் என பலதரப்பட்டோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் மீதான மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த 28 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாவை சேனாதிராஜா, 29 ஆம் திகதி தனது 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் இன்று (02) பகல் இரண்டு மணிக்கு அக்கினியில் சங்கமமானது.

இந்தநிலையில், மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள் என பெயரிடப்பட்ட பதாகை மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாகையானது வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்கள் என தெரிவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் என பலதரப்பட்டோரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மாவையின் இறப்பு, உடல்நலக்குறைவை தாண்டி மன அழுத்தத்தால் ஏற்பட்ட ஒரு விடயம் என அனைவராலும் தொடர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு, மாவையின் உறவினர்களும், சில அரசியல் தலைமைகளை மாவையின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள கூடாது என எச்சரித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு எச்சரிக்கப்பட்டவர்கள் இறுதி கிரியைகளிலும் கலந்து கொள்ளாத நிலையில், ஒருவேளை இவர்களின் தொடர் அழுத்தத்தின் காரணமாகத்தான் மாவை பாதிப்பட்டிருக்கலாம் எனவும் சமூக ஊடகங்கள் உட்பட அதே கட்சியை சார்ந்த முன்னாள் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது குறித்த பதாகைகள் காட்சியளிக்கபட்டிருப்பது தமிழ் அரசியல் தலைமைகள் மீதான தமிழ் மக்களின் ஆதங்கத்தையும் மற்றும் கோபத்தையும் வெளிப்படையாக காட்டுவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mavai_2.jpg

 

Mavai_1.jpg

 

Mavai_3.jpg

 

Mavai_5.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...