Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●
செய்திகள்

சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது!

T

The Leader Desk

பிப்ரவரி 2, 2025 • 4:19 AM

சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • “கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்புக்காக 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
  • “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீதியில் உள்ள விசாலாமான இல்லத்தில் 2 பேரே வசித்து வருகின்றனர்.
  • எனவேதான் அவர்களுக்கு பொருத்தமான வீடொன்றை தருகின்றேன் ,அங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறுகிறேன்.
எழுத்து அளவு:

அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் - பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்புக்காக 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தமோ, பாரிய அச்சுறுத்தலோ இல்லாத நிலையில் அவ்வாறான பாதுகாப்பு தேவையில்லை.

“அநாவசிய செலவுகளை குறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு திருத்தப்பட்டதே தவிர, அதில் எந்த பழிவாங்கல் நோக்கமும் இல்லை.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீதியில் உள்ள விசாலாமான இல்லத்தில் 2 பேரே வசித்து வருகின்றனர். எனவேதான் அவர்களுக்கு பொருத்தமான வீடொன்றை தருகின்றேன் ,அங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறுகிறேன்.

அத்துடன், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், புதிய சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் விடுத்து பலர் பயன்படுத்தியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளாவர். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லொஹான் ரத்தவத்த போன்றவர்களின் சட்டவிரோத வாகனங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.

“தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, இன்னும் சில நாட்களில் மேலும் ஓரிருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படக்கூடும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கம் இலங்கையில் 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...