அதன்படி, ஒரு கிலோ கரட் 700 ரூபாவில் இருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
பீன்ஸ் (Beans), லீக்ஸ் (Leeks) போன்ற காய்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலான அதிக விலைக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 30 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோ பூசணிக்காயின் விலையும் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் 100 ரூபா முதல் 130 ரூபா வரை விற்பனையாகியுள்ளது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக அதிகளவிலான காய்கறி செய்கைகள் அழிவடைந்துள்ளமையே இவ்வாறு விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளதாக தம்புளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


