கடும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (30) உடைந்ததன் காரணமாக, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதன்படி, இன்று (31) காலை வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேர் மூதூர் பிரதேசத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மூதூர் கற்கந்த விகாரை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடற்படையின் தரையிறக்கும் கப்பல் மற்றும் தரையிறக்கும் படகு அத்துடன் கடலோர ரோந்துக் கப்பல் ஆகியன மூதூர் பிரதேசத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கை கடற்படையால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


