தற்போதைய பாதுகாப்பு நிலைமை பாரதூரமானது அல்ல என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக 'டெய்லி மிரர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, நம்பகமான அச்சுறுத்தல் மட்டங்கள் காணப்பட்டால், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான ஆகியோருக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சபைத் தலைவர்களின் பொதுவான கடமைகளில் அல்லது தொடர்பில்லாத கடத்தல் நடவடிக்கைகளில் அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து அமைச்சர் விஜேபால சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


