விசாரிக்கப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரருக்கு உதவியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தமாரா குமாரி அபேரத்ன தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிதாரருக்கு இரண்டு கழுத்துப் பட்டிகள் (டை), ஒரு சட்டத்தரணியின் வாகன இலச்சினை ஸ்டிக்கர், தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரதிகள் மற்றும் ஒரு போலி சட்டத்தரணி அடையாள அட்டையைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் புகைப்படங்கள் என்பவற்றை அவர் வழங்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு கோரப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தற பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வெளிநாடு சென்ற ஐந்து நடிகைகள், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் சட்டவிரோத ஆயுத பரிவர்த்தனைகள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதைத் தீர்மானிப்பதற்காகவே அவர்கள் விசாரிக்கப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் முன்னேற்றத்தை நவம்பர் 7ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.


