கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் லலித் தர்மசேகர அவர்கள் கூறுகையில், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதன் நன்மை நுகர்வோருக்குக் கிடைக்காது என்கிறார்.
மாதாந்த எரிபொரள் விலைச் சூத்திரத்தின்படி, நேற்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 294 ரூபாவாகும். எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகள் மாறாமல் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்தது.
இந்த எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கூறியதாவது,
“நாங்கள் இந்த விதமாக நாற்பது வருடங்களுக்கு மேலாக வந்தோம். மேல் மாகாண சபையின் இறுதிக் கட்டணத் தீர்மானம் என்ன? அதிகபட்சம் 100 ரூபா. இரண்டாவது கிலோமீட்டருக்கு 85 ரூபா. நியாயமாகச் செயற்படும் ஒரு பகுதியினர் உள்ளனர், அவர்கள் 100 ரூபா மற்றும் 85 ரூபாவுக்கு ஓடுகின்றனர். சிலரிடம் கேட்டால், 100 ரூபா மற்றும் 100 ரூபாவுக்கு ஓடுகிறோம் என்றும் சிலர் கூறுகின்றனர். மக்கள் குறை கூறுகிறார்கள். சுரண்டல்கள் நடக்கின்றன. நாங்கள் மேலும் நகைப்புக்குரியவர்களாக இருக்கத் தயாராக இல்லை. ஆனால், ஒரு வலுவான ஒழுங்குமுறையின் கீழ் விலை ஒழுங்குமுறை செய்யப்பட்டால், அது ஒரு சட்டமாகும். சும்மா போகாமல், ஒரு குறிப்பிட்ட விலைச் சூத்திரத்தின்படி சரியான கட்டணத்தைக் குறிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்கும் போது, அந்த மோசடிகள் அனைத்தும் சமன் செய்யப்பட்டு இதைத் தொடரலாம். இந்த முறையும், கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெளிவாகிறது. அடுத்த முறையும் குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும் நாங்கள் அதை செய்ய மாட்டோம்.”


