சேவை பணியகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அதிக எடை மற்றும் உடல் பருமன் சதவீதம் 0.57% ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு (2024) 0.49% சதவீதமாகப் பதிவாகி இருந்தது.
குடும்ப சுகாதார சேவைப் பணியகம் தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் பதினொரு இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து இருநூற்று முப்பத்தேழு (1,173,237) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு, 356 சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகளை உள்ளடக்கிய 6,918 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 1,208,769 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பதிவுசெய்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அதிக எடை மற்றும் அதிக உடல் பருமன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பதுளை மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். இது சதவீதமாக 0.94% எனக் காட்டுகிறது. பதுளை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட குழந்தைகள் அதிகம் பதிவாகிய மாவட்டங்கள் கம்பஹா (0.71%) மற்றும் கொழும்பு (0.70%) ஆகும்.
குழந்தைகளுக்கு அதிக எடை மற்றும் அதிக உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணங்களாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுவது, அந்தக் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழக்கப்படாமை என்பனவாகும்.
அதேபோல், சுகாதார நிபுணர்கள் அல்லாத பல்வேறு தரப்பினரால் குழந்தைகளின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்படும் தலையீடுகளும், குழந்தைகளிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


