Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முற்பட்டவை?

T

The Leader Desk

நவம்பர் 1, 2025 • 5:56 AM

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முற்பட்டவை?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நூலகத்தின் கூரைத் திருத்த வேலைகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
  • அதன்போது கூரைக்குள் இரண்டு மகஸின்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால், கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று, அவற்றுக்கான நான்கு மகஸின்கள், மூன்று சிறிய குண்டுகள், கிளைமோரை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்துப் பொருட்கள், சேலைன் போத்தல், இரத்தக்கறையுடனான சாரம் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

நூலகத்தின் கூரைத் திருத்த வேலைகள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அதன்போது கூரைக்குள் இரண்டு மகஸின்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால், கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் ஒத்துழைப்புடன், மகஸின்கள் இரண்டையும் மீட்டதுடன், அதன் அருகில் சுமார் ஐந்தடி நீளமான வயரையும் மீட்டனர்.

அதன்பின்னர் கூரைக்குள் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கூரையினுள் தேடுதல் நடவடிக்கையைப் பொலிஸார் முன்னெடுத்த வேளை, ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று, மேலும் இரண்டு மகஸின்கள், மூன்று சிறிய குண்டுகள், கிளைமோரை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ரிக்னேட்டர், வயர்கள் மற்றும் காயங்களுக்கான மருந்துப் பொருட்கள், சேலைன் போத்தல், பஞ்சு, காயங்களுக்குக் கட்டும் பன்டேஜ், இரத்தக்கறையுடனான சாரம் உள்ளட்டவை மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்கள் அனைத்தும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது எனவும், அதனையடுத்து மன்றினால் வழங்கப்படும் கட்டளைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, துப்பாக்கி மகஸின்கள் சுற்றப்பட்டு இருந்த பத்திரிகை, சேலைன் போத்தலின் காலாவதி திகதி என்பவற்றின்  அடிப்படையில் அவை 2005ஆம் ஆண்டு காலப் பகுதியில் கூரைக்குள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  • காலைமுரசு
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ். பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் இருபது வருடங்களுக்கு முற்பட்டவை? | Tamil Leader | We Lead the Nation