Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

இனி கடைகளில் இலவசமாக பொலித்தீன் பைகள் கிடைக்காது!

T

The Leader Desk

அக்டோபர் 1, 2025 • 3:24 PM

இனி கடைகளில் இலவசமாக பொலித்தீன் பைகள் கிடைக்காது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (01) உயர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
  • பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டது.
எழுத்து அளவு:

வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று (01) உயர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அதன் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டது.

சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு வரி விதிக்கப்படும் என 2024 மார்ச் 28 ஆம் திகதி உயர் நீதிமன்றில் பிரதிவாதிகள் இணக்கம் வெளியிட்டிருந்ததாகவும், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலேயே இம்மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே தெரிவித்தார்.

இந்த வழக்கு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, “நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...