உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிவித்து அவர் மீது சேறு பூசும் வீடியோ

ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரக் குழு வெளியிட ஆயத்தமாவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி கூறுவதற்குத் தொடங்கியுள்ளது.

இதன் போது இந்த வீடியோவுடன் தொடர்புடைய சில விடயங்களையும் மொட்டு தரப்பினர் கூறியுள்ளனர். அதில் ஒன்றுதான் ஐ.தே.முன்னணியின் பிரசாரப் பிரிவின் பிரதானிகளுள் ஒருவரான துஷார வன்னியாராச்சி இதனைச் செய்கிறார் என்ற விடயமாகும்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள துஷார வன்னியாராச்சி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்யுமாறு கூறியுள்ளார்.

உண்மையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அவ்வாறான வீடியோ தயாரிக்கப்பட்டதா? அல்லது தயாரிக்கப்பட உள்ளதா? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இதுவரையில் இல்லை. எனினும் ராஜபக்ஷ பிரசாரப் பிரிவு இவ்விடயம் தொடர்பில் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது பொய்யாயின் அச்சப்படத் தேவையில்லை.

பொய்யான விடயம் தொடர்பானதாயின் ஒருவர் அந்தளவுக்கு அச்சப்படத் தேவையில்லை. காரணம் அந்தப் பொய்யை முறியடிப்பதற்கான விடயங்களை முன்வைக்க முடியும் என்பதனாலாகும். அந்தப் பொய்யை உருவாக்கியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் முடியும்.

சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குழு தொடர்பில் வெளியாகியுள்ள விடயம், அவர்களுக்கு புலனாய்வுத் துறையின் தகவல் வழங்குனர்களான ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வசதிகளைச் செய்து கொடுத்து சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி