ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  கட்சியின்

தலைமையகமான சிரிகொத்தாவில் கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச 2019ம் ஆண்டின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுக் கொண்டிருப்பது ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்திற்கு கடும் சவால்களை ஏற்படுத்தியேயாகும்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவான “ஐக்கிய தேசிய முன்னணி” வின் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்க முடியும் என்பது தொடர்பில் சிலர் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.   வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய அல்லது சில நேரம் கட்சிக்கு வெளியே உள்ளவரான பாட்டலி சம்பிக்க ரணவக்கவாக இருக்க முடியும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சஜித் பிரேமதாச வேட்பாளருக்காக பாரிய பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று கட்சியின் உள்ளே அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் உள்ளிட்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் பெரும்பாலானோரின் ஆதரவினைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாச பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளது தலைவர்களினதும், தனது கட்சியின் செயற்குழுவினதும் அங்கீகாரத்தை வெற்றி கொண்டார்.


“பிரேமதாசவின் மகன்”

1967 ஜனவரி 12ம் திகதி கொழும்பில் பிறந்த சஜித், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஓரே மகனாவார். அவரது தாய் ஹேமா பிரேமதாச என்பதோடு, துலாஞ்சலி பிரேமதாச ஒரே சகோதரியாகும். சஜித்தின் மனைவி ஜலனீ பிரேமதாசாவாகும்.

கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளில் ஆரம்ப கல்வியைக் கற்ற சஜித், பின்னர் இங்கிலாந்தின் “மில்ஹில்” கல்லூரியில் (Mill Hill School) இடைநிலைக் கல்வியைக் கற்று  பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் பீடத்தில் (London School of Economics) நுழைந்து தனது முதலாவது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை அவரது சுயவிபரக் கோவையிலிருந்து தெரிய வருகின்றது. அவரது கல்விச் சான்றிதழ்கள் கடந்த காலங்களினுள் அரசியல் மேடைகளில் பகிரங்க தலைப்புக்களாக ஆகியிருந்தது.

சஜித்தைப் போன்று அவரது தந்தை ஆர். பிரேமதாச 1977ம் ஆண்டில் பிரதமர் பதவியையும், 1989ம் ஆண்டில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுக் கொண்டது அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பலமானவர்களாக இருந்த முக்கிய அரசியல்வாதிகளைச் சவாலுக்கு உட்படுத்தியாகும்.

இதற்காக ரணசிங்க பிரேமதாச முதலில் நாடு முழுதும் கீழ் மட்டத்தில் தனது அதிகாரத்தை விரிவாக்கிக் கொண்டதோடு, அதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி பொறிமுறையினை தனது விருப்பத்திற்கு உட்படுத்திக் கொண்டார்.

அவரது மகன் சஜித் பிரேமதாசாவும் 2019ம் ஆண்டி ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை வெற்றி கொள்வதற்காக தனது தந்தையின் பாதையிலேயே பயணித்த முறையினையும் காணக் கூடியதாக இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

1972ம் ஆண்டு குடியரசின் அரசியல் யாப்பினைத் திருத்தம் செய்து அதுவரையில் பிரதமர் பதவியில் இருந்த ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக மாறிக் கொண்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவி வெற்றிடமாக ஆகியது.  இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட மூத்தவர்கள் சிலர் முன்வந்த போதும் அவர்களை முந்திக் கொண்டு அந்த பிரதமர் பதவியை ஆர். பிரேமதாச வெற்றி கொண்டார்.  ரணசிங்க பிரேமதாச 1988ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கட்சியினுள் இதனை விட கடுமையாக இருந்த பணிப்போரின்  இறுதியில் வெற்றி கொண்டார்.

பிரேமதாசாவின் மகன் சஜித்தும் 2019ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை அவ்வாறான கட்சியின் உள்ளகப் போரில் ஈடுபட்டே பெற்றுக் கொண்டார்.

“நான் பிரேமதாசாவின் மகன்” என அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டங்கள் பலவற்றில் கூறியிருந்தார்.  மாவட்ட மட்டத்தில் “துருணு சவிய” என்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்த சஜித் பிரேமதாச, மீண்டும் “பிரேமதாச யுகம்” ஐ உருவாக்குவதாக சபதம் மேற்கொண்டிருந்தார்.

அரசியல் பயணம்

லண்டனில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது 1993ம் ஆண்டு  மே மாதம் முதலாம் திகதி தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு திரும்பிய சஜித், “பிரேமதாச அரசியலின்” பொறுப்புக்களைப் பாரமேற்றுக் கொண்டார்.

தனது தந்தையின் கோட்டையாக இருந்த மத்திய கொழும்பிலிருந்து விடை பெற்ற சஜித், தனது அரசியல் பயணத்தை தென் மாகாணத்தின் கஷ்டப் பிரதேசமான ஹம்பாந்தோட்டையிலிருந்து ஆரம்பித்தார்.

சஜித்தின் வார்த்தைகளில் கூறுவதாயின், அவரது “சமூக நலன் வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டை மாட்டத்தின் வறிய மக்களுக்கான ஆசீர்வாதமாகும்” ஆகியுள்ளதோடு, அவர் 2001ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.

2001ம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் உருவான ஐக்கிய் தேசிய கட்சி ஆட்சியில் சுகாதார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைப் பிரதிநிதித்துப் படுத்தி பாராளுமன்றத்திற்குரிய

ஆசனத்தை வெற்றி கொண்ட சஜித், 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்த மைத்திரிபால சிரிசேனா அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி உள்ளட்ட அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தலைமைத்துப் போட்டி

சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்காக நீண்டகாலமாக அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதியாகும். அவர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பல தடவைகள் முன்னின்ற போதிலும் அந்த முயற்சிகள் ரணிலுக்கு சாதகமான தீர்மானங்களுடனேயே முடிவடைந்தது.

அவ்வாறான அதிகாரப் போர் சில சந்தர்ப்பங்களில் சிரிகொத்தாவுக்கும் சேதங்களை ஏற்படுத்தியே நிறைவடைந்திருக்கின்றது. “ரணிலுக்கு எதிரான” சஜித்துக்கு ஆதரவான ஊர்வளத்திற்கு மாத்தரையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, நீதிமன்றம் வரைக்கும் சென்ற அந்த மோதல் “கறுவா தடி வழக்கு” என  மக்கள் நடைமுறையில் உள்ளது.

ரணிலுக்கு பதிலாக கரு ஜயசூரியவை கட்சித் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் போராட்டம் சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும்  அந்த முயற்சிகள் கரு ஜயசூரிய கட்சியினுள் கடினமான பற்றுடன் இருந்ததால் வெற்றியளிக்கவில்லை.  சஜித்தை கட்சி தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவதற்கு துணை நின்ற சிலருக்கு கட்சி இல்லாமல் போன போதிலும் சஜித் தொடர்ந்தும் கட்சியின் பிரதி தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் 2018ம் ஆண்டு செப்தெம்பர்  மாதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு முன்னரும் பின்னரும் ஜனாதிபதி மைத்திரிபால பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு தன்னை ஐம்பது தடவைகளுக்கும் மேலாக அழைப்பு  விடுத்ததாக சஜித் பிரேமதாச கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி