புதிய கூட்டணி ஒன்றிற்காக ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொதுஜன பெரமுண கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பில் மக்களிடையே தற்போது அந்தளவு சாதகமான எதிர்பார்ப்புக்கள் இல்லை. தற்போது இந்தப் பேச்சுவார்த்தை சிக்கிக் கொண்டிருப்பது தாமரை மொட்டு சின்னம் தொடர்பான விடயத்தின் மீதேயாகும்.

சின்னம் மாத்திரமின்றி இன்னும் பல விடயங்கள் இருக்கக் கூடும் என்பது இந்த கட்டுரையாளரின் கருத்தாகும். அவற்றை வெளியில் கூறினாலும், இல்லாவிட்டாலும் அடையாளம் தொடர்பான பிரச்சினை என்பது தெளிவானதாகும். எவ்வாறாயினும் தாமரை மொட்டுச் சின்னத்தை ஒருபோதும் மாற்றப் போவதில்லை என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.  சின்னத்தின் பிரச்சினை காரணமாக கூட்டணி இணக்கப்பாட்டை சீர்குழைக்கும் சதி தொடர்பிலும் அவர்கள் அடிக்கடி ஸ்ரீ.ல.சு.கட்சியின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.  இதன் பிரதான எதிராளியாக இருப்பவர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகரவாகும்.

உண்மையில் தயாசிரி சரியா? தவறா?

சாதாரணமாக இரண்டு அல்லது பல தரப்பினருக்கிடையில் கூட்டணி அமைக்கப்படும் போது அத்தரப்பினரின் அடையாளங்களைப் பாதுகாப்பது முதலாவது விடயமாகும்.  அதற்காக எல்லா குழுக்களும் கட்டுப்பட்டிருக்கின்றது. தனி அதிகார பலத்தை ஏற்றுக் கொள்வதற்கு எவரும் கூட்டணியினுள் விரும்புவதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது இணக்கப்பாட்டிற்கு வருவதே சாதாரண இயல்பாகும்.

எனினும் பொதுஜன பெரமுணவின் மிகைப்படுத்திய மதிப்பீடு மற்றும் அரசியல் பெருமையின் காரணமாக வேறு எந்த அடையாளங்களையும் மதிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.  அவற்றை அவர்கள் புறந்தள்ளிவிடுகின்றனர். இதற்கு முன்னர் கூட்டு எதிர்கட்சியின் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்த போதும் அவர்கள் கடைபிடித்தது அந்தக் கொள்கையினையேயாகும்.

அன்று ஒருங்கிணைந்த பொதுஜன பெரமுண என்ற பெயரில் உருவாக்கப்படுவதற்கு ஆலோசிக்கப்பட்ட கூட்டணியைப் பற்றி இன்று எந்தக் கதையுமில்லை. ராஜபக்ஷக்களின் அதிகாரங்களுக்கு மத்தியில் முழந்தாளிட்ட கூட்டு எதிர்கட்சியின் தலைவர்கள் தமது அடையாளங்களைக் காட்டிக் கொடுத்தனர். திணேஷ் குணவர்தன, வாசுதேவ, விமல் மற்றும் கம்மன்பில போன்றோர் தமது அடையாளங்களை ராஜபக்ஷக்களிடம் சில்லறைக் காசுக்கு விற்றுவிட்டனர்.

தற்போது பொதுஜன பெரமுண ஸ்ரீ.ல.சு.கட்சியுடனும் அந்த விளையாட்டையே செய்ய முனைகின்றது. அதற்குத் தடையாக இருப்பது தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமைத்துவமாகும். தற்போது இதனைத் தாக்குவதற்கு அவர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அதிக தாக்குதல் மேற்கொள்வது ராஜபக்ஷ முகாமுக்கு அடிமையானவர்களேயாகும்.

ராஜபக்ஷக்கள் இந்நாட்டிற்குச் செய்த நல்லவைகளையும், தீயவைகளையும் நாம் அறிவோம். பொதுஜன பெரமுண என்பது ராஜபக்ஷக்களின் அடையாளமே தவிற வேறு எதுவுமில்லை. அதற்கு அடிபணிந்தால் அவர்கள் அடிபணிந்தோரை கீழே போட்டு மிதிப்பது சாதாரண விடயமாகும். தேசிய சுதந்திர முன்னணி மற்றும் அதன் தலைமைத்துவதற்கு சொந்தமாகியிருப்பது அந்த அடிபணிதலின் எதிர்விணைகளாகும்.

எனவே ராஜபக்ஷக்களின் அடையாளத்திற்கு மத்தியில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் அடையாளத்தை அடகு வைக்காதிருப்பதற்கு தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஸ்ரீ.ல.சு.கட்சி அங்கத்தவர்கள் பாராட்ட வேண்டும். ஸ்ரீ.ல.சு.கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்க வேண்டியது ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொதுஜன பெரமுண கட்சிகளின் கூட்டணியே தவிற ஸ்ரீ.ல.சு.கட்சி பொதுஜன பெரமுணவிடம் அடிபணிவதல்ல.

எனவே இரு தரப்பினரும் தமது அடையாளங்களைப் பாதுகாத்துக் கொண்டு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் இடமுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

(சமூக வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி